×

அன்னை பவனி வரும் வாகனங்கள் 2: அன்னம் எனும் ஹம்ஸ வாகனம்

அன்ன வாகனத்தில் பிராம்மிங

பறவைகளில் வலிமைக்குக் கருடனும், சுகத்திற்குக் கிளியும் அடையாளமாக இருப்பதைப் போலவே அறிவுக்கும் ஞானத்திற்கும் குறியீடாக இருப்பது  அன்னமாகும். அறிவுக் கடவுளான பிரம்மதேவன் அன்ன வாகனத்தில் பவனி வருகிறார். அன்பர்கள் தெய்வங்கள் தமக்கு அறிவையும், தூய்மையையும் ஆராய்ந்து  தெளியும் திறத்தையும் அருள்வதைக் குறிக்கும் வகையில் தாம் வணங்கும் தெய்வங்களை அன்னவாகனத்தில் அமர்த்தி பவனி வரச் செய்கின்றனர்.

அன்ன வாகனம் வெண்மை நிறம் கொண்டதாக இருக்கிறது. அதன் உடலில் சிறுசிறு சிறகுகளும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. பெரிய வட்டமான  கண்களைக் கொண்டுள்ள இந்த அன்னத்தின் தலைமீது கொண்டை அமைந்துள்ளது. அலகில் நீண்ட மலர்க்கொடியைப் பற்றியிருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அலகும், கால்களும் பவழ நிறத்துடன் இருக்கின்றன. வால் சிறகுகள் விரிந்து விசிறி போல் இருக்கின்றன.

சிவபெருமான் அன்னவாகனத்தில் பவனி வரும் போது அம்பிகை கிளி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் பவனி வருகின்றனர். சோழநாட்டுத்  திருத்தலங்களில் பஞ்ச மூர்த்திகளை முகப்பில் அமைக்கும் போது சிவபெருமானை இடப வாகனத்திலும், அம்பிகையை அன்ன வாகனத்திலும் அமைக்கின்றனர்.  அன்னவாகனத்தில் பவனி வரும் தெய்வங்களை வழிபடுவதால் அறிவில் தெளிவும், புத்தியில் கூர்மையும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகின்றன.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Tags : Annam ,Humsa ,
× RELATED பாயச அன்னம்